கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை... ஜெய்சங்கர் உறுதி!
Jul 25, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை… ஜெய்சங்கர் உறுதி!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேர், கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது, 8 பேரும் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இதன் பேரில் 8 பேரையும் கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 26-ம்தேதி கத்தார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இத்தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இத்தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்குக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்தார். அப்போது, “இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரையும் இன்று சந்தித்தேன். அப்போது, அரசு இந்த வழங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். மேலும், அக்குடும்பத்தினரின் வலிகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கூடவே 8 பேரையும் விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Met this morning with the families of the 8 Indians detained in Qatar.

Stressed that Government attaches the highest importance to the case. Fully share the concerns and pain of the families.

Underlined that Government will continue to make all efforts to secure their release.…

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 30, 2023

 

Tags: INDIANSJaishankarexternal affairs ministerQatar
ShareTweetSendShare
Previous Post

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: ஜே.பி. நட்டா சாமி தரிசனம்

Next Post

சென்னை – சேலம் விமான சேவை மீண்டும் தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies