பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என். ரவி முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முத்துராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாக பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாளைத் தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தியாகங்கள் பாரதத்தை ஒரு சிறந்த தேசமாக உருவாக்க நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார்