ஆந்திராவில் இரயில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!
Jun 13, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் இரயில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த இரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்திருக்கிறது. இவ்விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில், இரயில் பாதையின் மேல் இருக்கும் கேபிளில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக, விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் இரயில், கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதே வழித்தடத்தில் பலாசா எக்ஸ்பிரஸ் இரயில் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இந்த இரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் இரயில் மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் 3 இரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதையடுத்து, இரயில்வே ஊழியர்களும், காவல்துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பயணிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 40  பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்த சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. இவ்விபத்தில் இரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் இரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த இரயில் விபத்துக்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று இந்தியன் இரயில்வே தெரிவித்திருக்கிறது. அதேசமயம், முதல்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் இரயில் சிக்னலை மீறிச் சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் பிறகே கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் இரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரயில் விபத்து குறித்து இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நிலைமை குறித்து ஆய்வு செய்தார். ஆந்திரப் பிரதேச முதல்வரிடம் விபத்து குறித்துப் பேசினேன். மாநில அரசு மற்றும் இரயில்வே குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும். பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: trainaccidentAndra Pradesh19 killed
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை

Next Post

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies