லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!
Sep 12, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சுவைத்து… அடடா… அது ஒரு புதிய அனுபவம். ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்காக காத்திருக்கும் சிறுவர்களின் உள்ளம் துள்ளிக் குதிக்கும். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைத்துத் தரப்பினரும் தங்களது வசதிக்கேற்ப தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, லண்டன் மேயர் சாதிக் கான், அந்நகரில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். டிராஃபல்கர் சதுக்கத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது, லண்டனில் வசிக்கும் இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், யோகா பட்டறைகள், பொம்மலாட்டம், இசை நிகழ்ச்சிகள் என தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டியது. அதேபோல, நாட்டுப்புறப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு பட்டையைக் கிளப்பிய மக்கள், “ஜெய் ஹோ மற்றும் ஜோ ஹை அல்பேலா” ஆகிய பாலிவுட் பாடல்களுக்கும் நடனமாடி மகிழ்ந்தனர். இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பலகாரங்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்டர்கள் ருசித்து சாப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைத்து மக்களும் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி குறித்துப் பேசிய லண்டன் மேயர் சாதிக் கான், தீபாவளி பண்டிகை இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் அடையாளமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் முறையாகக் கலந்துகொண்ட ஆசிரியர் ஜேம்ஸ் என்ற உள்ளூர்வாசி, “இதுதான் நான் கலந்துகொள்ளும் முதல் தீபாவளி பண்டிகை. தீபாவளி ஒரு அற்புதமான பண்டிகை. உண்மையிலேயே இப்பண்டிகை எனக்கு நம்பமுடியாத அளவுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. இது வேற லெவல் பண்டிகை. ஒவ்வொரு இடமும், எங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கற்றுக்கொடுக்கிறது” என்று கூறினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இந்தியாவுக்கு வெளியே நான் தீபாவளியை கொண்டாடுவது இதுவே முதல் முறை. இது மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் அருமையான அனுபவம். புதிய மனிதர்களைச் சந்திப்பதை நாங்கள் அனைவரும் ரசிக்கிறோம். இந்திய உணவின் மீது எனக்கு மிகுந்த ஆசை இருந்தது. கடைசியாக அது எனக்கு இங்கு கிடைத்தது. மேலும், இது தீபாவளி பண்டிகைக்கு ஒரு நல்ல தொடக்கம்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவியன் என்ற உள்ளூர்வாசி கூறுகையில், “ட்ரஃபல்கர் சதுக்கத்தில் இது எனது முதல் தீபாவளி அனுபவம். உண்மையிலேயே இதை நான் மிகவும் ரசித்தேன். எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். எனவே, எனது நண்பருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையில் நடனமாடி மகிழ்ந்தோம். இங்குள்ள சூழல் அற்புதமாக இருந்தது. மக்களும் மிகவும் நட்புடன் இருக்கிறார்கள்” என்றார்.

Tags: LondonfestivalDiwali
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திராவில் இரயில் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies