ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் கில் 4 வது ஓவரில் 1 பௌர் அடித்து 9 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து காமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 40/3 ஆகா இருந்தது. இவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி சற்று அணிக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தி வந்தது.
அப்போது 30 வது ஓவரில் கே.எல்.ராகுல் 3 பௌண்டரிஸுடன் 58 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சதம் எடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் 36 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 101 பந்துகளில் 87 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா விளையாடி வந்தனர். இதில் ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஷமி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து போனார்.
பின்னர் நிதானமாக விளையாடி வந்த சூர்யா குமார் யாதவ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 47 பந்துகளுக்கு 49 ரன்களில் அரைசதம் வாய்ப்பை தரவிட்டு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பும்ரா மற்றும் குலதீப் யாதவ் தலா 1 பௌண்டரீஸ் அடித்து குலதீப் 9 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர்களில் முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்களும் மார்க் வுட் 1 விக்கெட்டும் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் டேவிட் மாலன் 4 வது ஓவரில் 16 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஜோ ரூட் ஆட்டமிழந்தார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் 7 வது ஓவரில் றன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
பின்னர் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 14 பந்துகளில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 35/4 ஆகா இருந்தது.
பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 15 வது ஓவரில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 35 வது ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து. இந்தியாவில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்களும் பும்ரா 3 விக்கெட்களும், குலதீப் யாதவ் 2 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட்டது.