இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள் குறித்து இரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
1. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டை போல் அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 101 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதற்கு லக்னோ பிட்ச் முக்கியமான காரணமாக அமைந்தது.
இதனை திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ், “யாருமே வராத அப்போவே தெரிஞ்சிருக்கும்.. இடம் எவ்ளோ விக்குனு” என பிரகாஷ் ராஜிடம் கூறுவார். அதனை மாற்றி இந்திய இரசிகர்கள் இங்கிலாந்து அணியிடம், ஒருநாள் கிரிக்கெட்டில் டி20 ஆடுற எங்க ரோகித் சர்மாவே பொறுமையாக ஆடும் போதே யோசிச்சிருக்கனும்.. பிட்ச் எந்த அளவுக்கு பவுலிங்-க்கு உதவியாக இருக்குனு” என்று சொல்லுவதை உருவாக்கியுள்ளனர்.
2. ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து அணியின் பட்லர், ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸை அழைத்து கொண்டு இந்தியா வந்தார். ஆனால் முதல் அணியாக் இங்கிலாந்து வெளியேறியுள்ளது.
இதனை நடிகர் வடிவேலு தன்னை மறைமுகமாக அடித்த சில பேரை, அடிப்பதற்காக தனது குருநாதரை அழைத்து வருவார். அந்த காமெடியுடன் பென் ஸ்டோக்ஸ் ஒப்பிட்டு குருநாதரின் நிலைமை ஏற்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.
3. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இது அவரின் சிறந்த உலகக்கோப்பை ஆட்டமாக இரசிகர்கள் பாராட்டி வந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை “அச்சம் என்பது மடமையடா” படத்தில் சிம்பு சொல்வதை மாற்றி, “100 அடிக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம்ல” என்று உருவாக்கப்பட்டுள்ளது.
4. மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவை ஒரு கும்பல் அட்டாக் செய்ய மருத்துவமனைக்கு வரும். அப்போது துப்பாக்கி குண்டுகள் தீர்ந்து போக, சென்ராயன் வந்து, “அண்ணா என்ன செய்யப் போறோம்ணே” என்று கேட்பார்.
அதுபோல் ரசிகர்கள், “அண்ணே 230 தான் இலக்கு.. என்னணே பண்ணப் போறோம்” என்று கேட்பதாகவும், அதற்கு விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ராக்கெட் லாஞ்சர் வைத்து சுடுவதை போல் பவர் பிளே ஓவர்களில் முகமது ஷமி மற்றும் பும்ரா இருவரும் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்துவதை போல் உருவாக்கப்பட்டுள்ளது.
5. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய போது, இங்கிலாந்து பார்மி ஆர்மி ட்விட்டர் பக்கத்தில் வாத்தின் தலையில் விராட் கோலி முகத்தை பொறுத்தி டக் என்று கிண்டல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணியில் டக் அவுட்டான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் முகத்தையும் வாத்தின் தலையை பொறுத்தி இந்திய அணி இரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அதேபோல் விராட் கோலி சொன்ன, நீங்கள் அடிக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பது போல், அடிவாங்கும் போதும் ஏற்றுக் கொள்ளம் பக்குவம் இருக்க வேண்டும் என்ற புகைப்படத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.