ரஷ்ய விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய கும்பல் !
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய கும்பல் !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 30, 2023, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய ஒரு கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்து பயணிகளை தாக்கியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. இதன் பிறகு, காஸா நகரின் மீது இஸ்ரேல் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் தாகெஸ்தான் மாகாணத்தில் உள்ள ரஷ்ய நகரமான மகச்சலாவில் உள்ள விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பல் முற்றுகையிட்டது, இஸ்ரேலில் இருந்து ஒரு விமானம் வருவதாக வதந்தி பரவியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய அந்த கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்து பயணிகளை தாக்கியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த கும்பல் கோரியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தாகெஸ்தான் கவர்னர் உறுதியளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் யூத குடிமக்களை ரஷ்யா பாதுகாக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த வன்முறை வெடித்துள்ளது. மேலும் விமான நிலையத்தில் கூடியவர்களில் பலர் யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை வைத்திருந்தனர். அதில் “தாகெஸ்தானில் குழந்தைகளைக் கொலை செய்பவர்களுக்கு இடமில்லை” என்ற வாசகப் பலகையை ஒரு எதிர்ப்பாளர் வைத்திருக்கிறார்.

இதுதொடர்பான பல வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் விமான நிலைய முனையத்திற்குள் ஒரு கூட்டம் நுழையும் போது, ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயல்வதையும், அவர்கள் கதவுகளை உடைக்க முயற்சிப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

Tags: RUSSIA AIRPORTMUSLIM MOB
Share
Tweet
SendShare
Previous Post

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Next Post

கிரிக்கெட் மீம்ஸ் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies