குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி நகரில் உள்ள புகழ்பெற்ற அம்பா தேவி கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி சென்று வழிபாடு செய்தார்.
இரண்டு நாள் பயணமாக அஹமதாபாத் சென்றுள்ள பிரதமர் அம்பாஜி அருகே சிக்ஹ்லா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து சேர்த்தார்.
பிரதமர் கான்வாய் கோவில் நகரமான அம்பாஜியை அடைந்தபோது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். உள்ளூர் தலைவர்கள் மற்றும் பூசாரிகள் வரவேற்ற பிறகு பிரதமர் கோவிலில் பூஜை செய்தார்.
அம்பாஜியில் பிரார்த்தனை செய்த பிறகு, பிரதமர் மோடி மெஹ்சானாவின் கெராலு தாலுகாவில் உள்ள தபோடா கிராமத்திற்கு ஒரு பொது நிகழ்ச்சிக்காக புறப்பட்டார், அங்கு அவர் ₹ 5,950 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்தத் திட்டங்கள் இந்திய இரயில்வே, குஜராத் ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (GRIDE), மாநில நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் துறைகள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகள் உட்பட பல்வேறு அரசுத் துறைகளுக்குச் சொந்தமானவை என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஹ்சானா, அகமதாபாத், பனஸ்கந்தா, சபர்கந்தா, மஹிசாகர், காந்திநகர் மற்றும் படான் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 16 வளர்ச்சி முயற்சிகளை மோடி வெளியிட உள்ளார்.