"இண்டி" கூட்டணி ஆளும் மாநிலங்களில் தலைதூக்கும் தீவிரவாதம்: எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இண்டி” கூட்டணி ஆளும் மாநிலங்களில் தலைதூக்கும் தீவிரவாதம்: எல்.முருகன் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“இண்டி” கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காணும் வகையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஹோட்டலில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியை பொதுமக்களோடு சேர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதியை, எம்.எல்.ஏ.வாக்கி, பின்னர் அமைச்சராகவும் ஆக்கி விட்டார்கள். மேலும், துணை முதல்வராக்கவும் அவரது தந்தை ஸ்டாலின் துடித்து வருகிறார். தி.மு.க.வில் இளவரசர்களுக்கே மரியாதை. அங்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக்க முடியுமா?

பா.ஜ.க.வில் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘இண்டி’ கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தீவிரவாதம் தலைதுாக்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி இருக்கிறார்கள்.

சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தில், ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பப்பட்டிருக்கிறது. கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கவர்னர் மாளிகை முன்பு, பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யார் பின்னணி, யார் உதவி செய்கின்றனர் என்பதை கண்டறிய வேண்டும்.

அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணி களில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.

Tags: bjpL MuruganCentral Minister
Share
Tweet
SendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கோவா முதல்வர், அண்ணாமலை மரியாதை

Next Post

அம்பாஜி கோவிலில் பிரதமர் மோடி

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies