ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும். இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில், லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, டவ்ஹித் ஹிர்தோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், ஃபகர் ஸமாம், இப்திகார் அகமது, அகா சல்மான், ஷாகின் அப்ரிடி, உஸ்மா மிர், ஹரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.