பெண் கவுன்சிலர்கள் மீது நாற்காலி வீச்சு - திமுகவினர் அராஜகம்!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் கவுன்சிலர்கள் மீது நாற்காலி வீச்சு – திமுகவினர் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டத்தில், எதிர்க்கட்சி பெண் கவுன்சிலர் மீது, திமுக கவுன்சிலர் நாற்காலி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாகத் தேங்கியுள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் சிலர் புகார் தெரிவித்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்குப் பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால், கூட்டத்தை நடத்தக் கூடாது அதிகாரிகள் வந்த பின்னரே கூட்டத்தை நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால், நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக உருவெடுத்தது.

எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 -வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென பெண் கவுன்சிலர் விஜயலட்சுமி மீது நாற்காலியைத் தூக்கி வீசினார்.

இதனால் ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்களும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியாததால், மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட 11 தீர்மானம் ஆல் பாஸ் எனக் கூறிவிட்டு அரங்கைவிட்டு வெளியேறினார்.

இதனால் கோபமடைந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 9 பேரும், திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாகவும், பெண் கவுன்சிலர் மீது நாற்காலி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: DMKmetupalayam
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங் தேர்வு!

Next Post

திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்: ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies