2024 தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: கோவா முதல்வர் நம்பிக்கை!
Mar 15, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: கோவா முதல்வர் நம்பிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்வதற்காக, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, மதுரை விமானத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பிரமோத் சாவந்த், “எதிர்கட்சிகளின் கூட்டணியை இந்தியா கூட்டணி என்று சொல்லக்கூடாது. அது ’இண்டி’ கூட்டணி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அந்தக் கூட்டணியில் எந்தத் தலைவரும் இல்லை. குறிப்பாக, இந்தியாவை ஆள பிரதமர் நரேந்திர மோடி போன்று எந்தத் தலைவரும் இல்லை. இம்முறை 300 அல்ல 400 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைப்போம்.

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா காணாத வளர்ச்சியை, இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றி இருக்கிறார். மனிதவள மேம்பாடு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம்.

தனிப்பட்ட முறையில் நான் 4 மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும். தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் பா.ஜ.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் செய்த சாதனையை வைத்து 100% மீண்டும் பிரதமராக வருவார். தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செய்திருக்கிறார். இந்த வளர்ச்சிகளின் மூலம் மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள். மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்றார்.

Tags: MaduraiinterviewGoa CM
ShareTweetSendShare
Previous Post

86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Next Post

ஒற்றுமைக்கான ஓட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies