தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளது. இந்த மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 7 -ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேபோல, மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான தகவல்களை http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என தேர்வுக்குழு செயலாளர் அருண லதா அறிவித்துள்ளார்.