டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் இருந்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இன்று காலை டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் இருந்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இவ்வளவு பெரிய நாட்டை ஒன்றிணைத்ததில் சர்தார் படேலின் மறக்க முடியாத பங்களிப்பு உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, பிரிட்டிஷார் நாட்டை விட்டுச் சென்ற அந்த நேரத்தில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, ஒரு சில நாட்களில் ஒற்றுமையின் அடையாளமாக இந்திய வரைபடத்தை உருவாக்கும் பணியை செய்தார் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நித்யானந்த் ராய்,மீனாட்சி லேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.