உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே திமுக முயற்சித்து வருகிறது எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கடந்த 27.09.2023 அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் என் மண் என் மக்கள் பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301 ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு உயர்த்தியிருப்பது குறித்தும், நீலகிரி நகராட்சி, நூறு ஆண்டுகளாக, ஐந்து தலைமுறைகளாக கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் சிறுகுறு வியாபாரிகளை, வெறும் 100 மணி நேரத்தில் கடைகளைக் காலி செய்யச் சொல்லி விரட்டுவது குறித்தும் பேசியிருந்தோம்.
கடந்த 27.09.2023 அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் #EnMannEnMakkal பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301 ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு… pic.twitter.com/KUENuh7k4l
— K.Annamalai (@annamalai_k) October 31, 2023
முறையான அவகாசம் கொடுக்காமல், இத்தனை அவசர கதியில் கடைகளைக் காலி செய்து வெளியேறச் சொல்வது குறித்த சந்தேகத்தையும் எழுப்பியிருந்தோம். கடைகளைக் காலி செய்வதில் நகராட்சியின் அவசரம் குறித்த எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார் திமுக நீலகிரி நகராட்சி உறுப்பினர் முஃப்தாபா.
நீலகிரி நகராட்சித் துணைத்தலைவர், இந்தக் கடைகளைக் காலி செய்ய 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தரும் தகவலை, நகராட்சி கூட்டத்திலேயே வெளியிட்டிருக்கிறார்.
லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதை, திமுக நகராட்சி உறுப்பினரே வெளியிட்டிருக்கிறார். ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றொரு புறம், ஊழலில் திளைக்கும் திமுக நிர்வாகிகள் என தமிழகத்தை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக.
உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே முயற்சித்து வருகிறதே தவிர, ஆட்சியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
















