பொறியியல் பட்டதாரி இளைஞர் கனகராஜ் மரணம், நேரில் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்த, கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் அருகே நன்னியூர்புதூர், ந.குளத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் சகோதரர் கனகராஜ், கடந்த ஆகஸ்ட் மாதம், துரதிருஷ்டவசமாக மரணமடைந்து விட்டார். இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் முன்னெடுத்து, இந்திய தேசிய மாணவர் சங்கம் உறுதுணையோடு சேகரித்த 5.8 லட்சம் ரூபாய் நிதியை, மறைந்த சகோதரர் கனகராஜ் அவர்களது தாயாரிடம் காசோலையாக வழங்கினோம்.
சகோதரர் கனகராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எதுவும் உடனடி ஆறுதல் தராது எனினும், காலம் அவர்களை இந்தத் துயரிலிருந்து விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.