அம்பானியின் ஜியோ வேர்ல்டு பிளாசா திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்.
அம்பானி என்றாலே ஆடம்பரம் தான் என சொல்லும் அளவுக்கு அவர் எக்கச்சக்கமான தொழில்களை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்டாக மும்பையில் பிரம்மாண்ட மால் ஒன்றை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டுள்ளது.
அம்பானியின் ஆடம்பர மால் ஓப்பனிங்கிற்கு நடிகை ஹன்சிகா தனது காதல் கணவர் சோஹைல் கத்தூரியா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய கணவர் கவுதம் கிச்சிலு உடன் அம்பானி மால் ஓப்பனிங்கில் கலந்துகொண்டார்.
அதேப்போல் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் அம்பானியின் பிரம்மாண்ட மால் ஒப்பனிங்கில் கலந்துகொண்டார். அவர் தன்னுடைய காதலன் சாந்தனுவுடன் ஜோடியாக ரேம்ப் வாக் செய்தார். அதேப் போல் தமன்னாவும் தனது காதலன் விஜய் வர்மாவுடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டார்.
மேலும் ரஷ்மிக்கா மந்தனா, ஆலியா பட், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், பூஜா ஹெட்ஜ் கரீனா கப்பூர் , மலைக்கா அரோரா குஷி கபூர், ஜான்வி, ஷ்ராத்ஹா, ராஜ்குமார் ராவ், ரன்வீர் கப்பூர், பிரியங்கா சோப்ரா, அர்ஜுன் கப்பூர், ஜெனிலியா, ரித்தீஷ், சாராளிக்கா மற்றும் சல்மான் கான் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இதனால் ஜியோ வேர்ல்டு நட்சத்திரங்களால் ஜொலித்தது.