ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியல் குறித்து பார்ப்போம்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, இந்தத் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 205 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஏழு போட்டியில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 6 புள்ளிகள் உடன் மைனஸ் 0.02 என்ற அளவில் இருக்கிறது. பாகிஸ்தான் முன்னேறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இலங்கை அணி ஏழாவது இடத்திலும் நெதர்லாந்து அணி எட்டாவது இடத்திலும் வங்கதேச அணி ஒன்பதாவது இடத்திலும் இங்கிலாந்து அணி பத்தாவது இடத்திலும் உள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.இந்த ஆட்டத்தின் முடிவால் முதல் நான்கு இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 10 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 8 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தான அணி இன்னும் மீதமிருக்கும் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்று ஆக வேண்டும்.அதன் பிறகு சில போட்டிகள் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிவடைய வேண்டும். இல்லை என்றால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியாது. இதனால் ஏற்கனவே முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.