ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படாத போரை நிகழ்த்தினர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 26-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்போரால் இஸ்ரேல் நாட்டில் 1,400 பேரும், காஸா நகரில் 8,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் 3,500 பேரும், காஸா நகரில் 22,000 பேரும் காயமடைந்திருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், ஏமன் நாட்டில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தாக்குதல் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நேற்று செங்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை இஸ்ரேலின் ஏரோ வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் செங்கடல் பகுதியில் படைகளை பலப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து இன்று செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தனது கடற்படை இருப்பை பலப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணை அழிப்பான்கள் செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, இன்று அதிகாலையில் இஸ்ரேலின் தெற்கே நகரமான ஈலாட் அருகே மற்றொரு ஏவுகணைத் தாக்குதலையும் இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்திருக்கிறது. அதேபோல, அமெரிக்க கடற்படையின் நாசக்காரக் கப்பலான யு.எஸ்.எஸ். கார்னியும், ஏமனில் இருந்து இஸ்ரேலை குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது என்று பென்டகன் தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelWar ShipsRed sea
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies