நமது பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும்.
சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வது ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்து அக்டோபர் 28 ஆம் தேதி முடிவடைந்தது.
இதில் பதக்கங்களை வென்ற வீரர்கள் வீராங்கனைகளை டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 73.29 மீட்டர் ஈட்டியை எரிந்து உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுமித் அன்டில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” சமீபத்தில் நான் ஆசிய விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்றேன், உலக சாதனை படைத்தேன். நான் பெருமையாக உணர்கிறேன். நமது பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது எனக்கு பிடித்துள்ளது. அவரின் ஊக்குவிப்பு, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும்” என்று கூறியுள்ளார்.