இலங்கையில் மலையகத் தமிழர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இலங்கை சென்றனர். குறிப்பாக, இலங்கையில் மரங்கள், தேயிலைத் தோட்டங்கள், ஸ்பைசஸ் உள்ளிட்டவை தமிழர்களின் கடும் உழைப்பினால் உருவாக்கினர். கண்டி, நுவரேலியா போன்ற பகுதிகளில் காட்டு விலங்குகளுடன் போராடி அப்பகுதிகளைத் தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கினார்கள்.
இதன் நினைவைப் போற்றும் வகையில், நாம் 200- ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம் என்ற நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றார்.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இலங்கை அரசு விடுத்த அழைப்பின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலை இலங்கை புறப்பட்டுச் சென்றார். பின்னர், விழாவில் கலந்து கொண்டு, மலையகத் தமிழர்களைக் கௌரவப்படுத்தினார்.
கடந்த 2015 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை பயணத்தின் போது மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.