இந்தியாவுக்கு இலங்கை வைத்த ட்விஸ்ட் !
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு இலங்கை வைத்த ட்விஸ்ட் !

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்த ரெகார்டை வைத்துள்ள ஏஞ்சலோ மாத்யூஸ் மீண்டும் களமிறங்குகிறார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்றையப் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இலங்கை அணி மோசமான பார்மில் உள்ளது. தான் ஆடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் இந்த அணி தோல்வி அடைந்தால் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பு பறிபோய்விடும்.

மறுபுறம், இந்திய அணி இலங்கையை வீழ்த்தினால் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த முதல் அணியாக மாறும். ஆனால், இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட வருகிறார் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ்.

2023 உலகக்கோப்பைத் தொடருக்கான முதற்கட்ட அணியில் மாத்யூஸ் பெயர் இடம் பெறவில்லை. பல வீரர்கள் இலங்கை அணியில் காயம் அடைந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மாத்யூஸ்.

மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மேலும் மாத்யூஸ் தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ரெக்கார்டு ஒன்றை வைத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக மாத்யூஸ் மூன்று சதங்கள் அடித்துள்ளார். அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் அடித்ததே மூன்று சதங்கள் தான். அது மூன்றுமே இந்தியாவுக்கு எதிராகத் தான் அடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அவரது பேட்டிங் சராசரி 53.57 ஆகும், ஸ்ட்ரைக் ரேட் 84.93 ஆகும். அதுவே, இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது அவரது சராசரி 105.16 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.77 ஆகும்.

இதில் இருந்தே மாத்யூஸ் இந்தியாவுக்கு பெரிய சிக்கலாக இருப்பார் என்பதை கணிக்கலாம். மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் ஆட ஒத்துழைக்கும் என்பதால் மாத்யூஸ் இந்தியாவுக்கு எதிராக அடுத்த சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் கவனமாக இருந்து அவர் விக்கெட்டை சாய்க்க வேண்டும்.

Tags: ICC World CupINDIAN CRICKETsrilanka vs india
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு: நவம்பர் 4 முதல் அமல்!

Next Post

டெல்லி: சமூகநலத்துறை அமைச்சர் வீட்டில் E.D. திடீர் சோதனை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies