அரையிறுதிக்குள் நுழையும் முதல் அணியாக இந்தியா இருக்குமா ?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 6 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
இந்தியா அணியை பொறுத்த வரையில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வலுப்பெற்ற அணியாக உள்ளது.
இந்தத் தொடரில் இலங்கை அணி மோசமான பாமில் உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தால் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பு பறிபோய்விடும்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்த ரெகார்டை வைத்துள்ள ஏஞ்சலோ மாத்யூஸ் இந்தப் போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார்.
இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 167 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் 98 போட்டிகளில் இந்தியாவும், 57 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆன நிலையில், 11 ஆட்டங்கள் முடிவில்லாமல் கைவிடப்பட்டது.
அதேபோல் உலகக்கோப்பையில் இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதி தலா 4 வெற்றிகளுடன் சம நிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்தியா 84% வெற்றி பெரும் என்றும் இலங்கை 16% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.