இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். திரிகோணமலை சென்ற அவர், அங்கு எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை கொண்டதாகவும், இலங்கையில் சுமார் 159 ஆண்டுகள் சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த எஸ்பிஐயின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது, SBI வங்கி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் எஸ்.தொண்டமான்.இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, எஸ்பிஐ வங்கி சேர்மன் தினேஷ்காரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.