திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானியின் மனம் கவர்ந்த மங்கைதான் இந்த நீட்டா. பரதநாட்டியத்தின் மீது தீராத காதலால் நடன ஆசிரியரானார். அதுமட்டுமல்ல, நடுத்தர குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இரு வீட்டாரும் நண்பர்கள், ஓரே தெரு. இதுபோதாதா, நீட்டாவின் பரதநாட்டியத்தில் சொக்கிப்போன முகேஷ் அம்பானி, நீட்டாவிடம் மனதைப் பறிகொடுத்தார். நேரம் கிடைக்கும்போதும், பார்க்கும் போதும் எல்லாம் காதல் வலையை வீசியுள்ளார்.
மும்பையின் முக்கியமான சாலையில் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது, முகேஷ் அம்பானி காரை சிக்னலில் நிறுத்திவிட்டு நீட்டாவிடம் ப்ரோபோஸ் செய்துள்ளார்.
காதலை ஏற்றுக் கொள்ளும் வரை காரை எடுக்கமாட்டேன் என அடம் பிடிக்க, வாகனத்துக்கும், காதலுக்கும் கிரீன் சிக்கனல் கிடைத்துள்ளது. 22 வயதில் இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற்றது.
இதற்குப் பின்பு நீட்டாவின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. ரூ.3 லட்சம் கப்பில் டீ குடிப்பது, பிங்க் வைர ஐ போன், ரூ.40 லட்சம் ரூபாய் புடவை, பல கோடி ரூபாய் ஆடம்பர வாகனம், ரூ.600 கோடி நகைகள், ரூ.15,000 கோடிக்கு வீடு என ஆடம்பர வாழ்வில் ஜொலித்தார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவராக ஒரு பக்கம் இருந்தாலும், கருணைக்கும், சேவைக்கும் நீட்டா முதலிடம் கொடுக்க மறக்கவில்லை.
அந்த வகையில், தனது 60 -வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் உள்ள ‘அண்ணா சேவை’வில் 3000 -க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தை நாளை கொண்டாடினார். அதேவேளையில், அந்த குழந்தைகளுக்கு மனமும், வயிறும் நிறையும் வகையில் தனது கையாலே சுவையான உண பரிமாறி மகிழ்ந்தார்.
நீட்டா என்பவர் 3 குழந்தைக்கு தாயானவர். அதையும் தாண்டி அவர் ஒரு பெண். பெண் என்பவளே கருணைக் கடல்தானே.