தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் - அப் பிரிவு!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் – அப் பிரிவு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளத்துக்கு முக்கியப் பங்களிப்பதற்கும், தமிழக பாஜக கொண்டிருக்கும் குறிக்கோளை வெளிக்காட்டும் ஸ்டார்ட் – அப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் வகையில், தமிழக பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது அணிப் பிரிவுகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு, மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு, தரவு மேலாண்மைப் பிரிவு மற்றும் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள், கட்சியின் செயல்பாடு மற்றும் மக்கள் தொடர்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.

தரவு மேலாண்மைப் பிரிவானது, தரவு சார்ந்த உத்திகளை முன்னிறுத்தி, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள் எடுக்க உதவுகிறது. மேலும், கட்சி பொதுமக்களுடன் தனிப்பட்ட முறையில் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவுகிறது.

தமிழகத்தின் ஆன்மீகம் மற்றும் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதில் கட்சியின் அர்ப்பணிப்பை ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு வெளிப்படுத்துகிறது.

விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு, தமிழக பாஜக. அடிமட்ட அளவில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்கள் திறமைகளை மேம்படுத்த உதவுகிறது. சமூகநீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் கட்சியின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய அரசின் நலத்திட்டங்களின் பலன்கள், தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதில் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கூறப்பட்ட பிரிவுகளும், கட்சியின் திறமையான அணிகளும், பிற பிரிவுகளும், தமிழக மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பெருமளவில் உதவி வருகின்றன. இதன் மூலம், தமிழக பாஜக, மக்களைப் பெருமளவில் சென்றடையவும். மக்கள் மத்தியில் கட்சியின் உயர்த்திக் கொள்ளவும் உதவியுள்ளன.

தனது தீவிர செயல்பாடுகளாலும், பொதுமக்களை ஈர்க்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், தமிழக பாஜக, தமிழகத்தில் ஒரு திறம் மிக்க அரசியல் சக்தியாக தன்னை வலுப்படுத்தியுள்ளது.

இன்றைய தினம், புதுமையான முயற்சிகளை உற்சாகப்படுத்தவும், ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்புப் பாலமாகச் செயல்படுவதற்கும், ஸ்டார்ட்-அப் பிரிவு என்ற புதிய பிரிவைத் தமிழக பாஜக தொடங்கவிருக்கிறது.

இந்தப் பிரிவைத் தொடங்கியதின் நோக்கம், வளர்ச்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். இந்த முன்னெடுப்பானது, தமிழக இளைஞர்களிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், திறமையான மற்றும் புதுமையான சிந்தனையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மேலும் நமது தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளத்துக்கு முக்கியப் பங்களிப்பதற்கும், தமிழக பாஜக கொண்டிருக்கும் குறிக்கோளை வெளிக்காட்டுகிறது.

இந்த ஸ்டார்ட் – அப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக, இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றியவரும், தற்போது தமிழக பாஜகவின் தென்காசி மாவட்டத்தில் தீவிர களப்பணியாற்றி வருபவருமான ஆனந்தன் அய்யாசாமி  நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய பொறுப்பில் அவர் திறம்படச் செயல்பட, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: k annamali bjp
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !

Next Post

ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நீட்டா அம்பானி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies