தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளராக சூர்யா சிவா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அறிவிக்கை
திரு.சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய… pic.twitter.com/YT6rylJhtK
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2023
அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.