அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
மேற்கு ஆசியாவில் பல இராஜதந்திர பின்னடைவுகளுக்குப் பிறகு, சிக்கலுக்கு உள்ளான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய கவலைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளை ஆண்டனி பிளிங்கன் தலைமையிலான தூதுக்குழு சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதல் 2+2 உரையாடல் வெள்ளை மாளிகையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தில் நிகழ்ந்தது. அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் மறைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.