விடாது கருப்பு போல, ராகு கால அமைச்சர் எ.வ.வேலுவின் மற்றொரு பினாமியான கரூர் பத்மா என்பவரது வீட்டைத் தேடிப்பிடித்து ரெய்டு மேளாவை ஆரம்பித்துள்ளது வருமானவரித்துறை.
கரூர் மாவட்ட திமுக செயலாளர் மறைந்த வாசுகி முருகேசனின், சகோதரிதான் இந்த பத்மா. திமுகவில் பெரிய அளவில் கட்சி பதவியில் இல்லை என்றாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பத்மாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. காரணம், வாசுகியின் தங்கை என்ற ஒரே காரணம் தான். இதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதவி இல்லாமலே அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அரசியல் செல்வாக்கு மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்டார்.
இந்த நிலையில்தான், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்ததுள்ளது ஐ.டி. குரூப்.
இதேபோல், அமைச்சர் எ.வ.வேலு உதவியாளரான சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் ஐ.டி. ரெய்டு தூள் பறக்கிறது.
மேலும், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் பேப்ரிக்ஸ் மற்றும் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் என்பவர் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது.
3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாகப் பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஐ.டி. ரெய்டில் திமுக நிர்வாகிகள் சிக்கியுள்ளதால், இதென்னடா வம்பா போச்சே என முக்கிய பிரபலங்கள் பலரும் செல்போனை சுவிட்ஆப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.