சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஆற்றுப்படுக்கையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி குளிக்கச் சென்ற விளிம்புநிலை (பட்டியலின) இளைஞர்கள் 2 நபர்களை சாதியை கேட்டு தாக்கியும், அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் கொடுமை செய்த வக்கிரம்… pic.twitter.com/j7lhhNaNNE
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 2, 2023
திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஆற்றுப்படுக்கையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி குளிக்கச் சென்ற விளிம்புநிலை (பட்டியலின) இளைஞர்கள் 2 நபர்களை சாதியை கேட்டு தாக்கியும், அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் கொடுமை செய்த வக்கிரம் பிடித்தவர்களின் அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இப்படிபட்ட குற்றவாளிகள் மீது, sc/st வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனையை இந்த அரசு பெற்று தர வேண்டும். போலி திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளை கான போகிறோம் ? புதுக்கோட்டையில் 300 நாட்களுக்கு மேல் ஆகியும் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்று தெரியவில்லை!
இதே நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், பள்ளி மாணவர் வீடு புகுந்து சாதி ரீதியில் அரிவாள் வெட்டு கொலை வெறி தாக்குதல் என்று தொடர்கிறது. சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.