சென்னை சென்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று 8 மின்சார இரயில்களும், நாளை 58 இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை சென்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று 8 இரயில்களும், நாளை, ஞாயிற்றுக்கிழமை 58 மின்சார இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்குச் செல்லும் மின்சார இரயில், இரவு 10.20 மற்றும் 11.45 மணிக்கு ஆவடிக்கு செல்லும் இரயில், திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் இரயில், பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அரக்கோணத்திலிருந்து 10.50 மணிக்கு மூர்மார்கெட் செல்லும் இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் இயங்காது என்பதால், பொது மக்கள் பாதிக்காதவாறு தெற்கு இரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.