பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக நலன் கருத்துக்கள் தெரிவிப்பது வழக்கம். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதன்படி, நாடாளுமன்ற தேர்தர்லில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில்
அளித்த கங்கனா “கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால், நான் போட்டியிடுவேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் முயற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால
போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.