தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, சாலையில் தூசியைச் சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ஆப் செய்தல் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், காற்று மாசு அபாய கட்டத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த, கிரேடட் ரெஸ்பான்ஸ் படையின் திட்டம் 4 அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, சாலையில் தூசியைச் சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ஆப் செய்தல் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், டெல்லி, குருகிராம், பரிதாபாத், காசியாபாத், கவுதம் புத்தா நகர் ஆகிய இடங்களில், பி.எஸ்., 3 ரக பெட்ரோல் மற்றும் பி.எஸ்., 4 ரக டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.