தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில், நவம்பர் 3 -ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இதனால், பட்டிதொட்டி எங்கும் இருந்தும், யாத்திரையில் கலந்து கொள்ள பொது மக்கள் ஆர்வத்துடன் ஓடோடி வந்தனர்.
தொண்டர்கள் சார்பில், அண்ணாமலையை வரவேற்று, கரூர் திருமாநிலையூரில் இருந்துதாந்தோணிமலை வரை கொடி கம்பம் நடப்பட்டும், மின் விளக்குகள் கட்டப்பட்டும், டிஜிட்டல் பேனர்கள் வைத்தும் அமர்க்கப்படுத்தினர்.
இதை ஜீரணிக்க முடியாத திமுக , அதிகாரிகளை ஏவிவிட்டது. அதன் எதிரொலியாக, திருமாநிலையூரில் இருந்து சுங்கச்சாவடி வழியாக தாந்தோணிமலை வரை அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தாக கூறி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் டிஜிட்டல் பேனர்களை அகற்றினர்.
இதனால், ஆவேசத்துடன் குவிந்த பாஜகவினர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ஆனால், பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதை சுட்டிக் காட்டியும்,
தனியார் பட்டா நிலங்களில் உள்ள பேனர்களை அகற்றமாட்டோம் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர்.
ஆனாலும், ஆவேசம் தனியாத தொண்டர்கள், திமுக தலைவர்கள் வருகையின் போதும் சரி, அல்லது திமுக கூட்டம், மாநாடு நடத்தும்போதும் சரி, இதேபோல் உறுதியுடன் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையெனில் பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.