இன்று ஓட்டு வீடு முதல் மாடி வீடு வரை பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், ஆசைக்காகவும் விதவிதமான செடி, பழக்கன்றுகள், தென்னங்கன்று, காய்கறி நாற்றுகளை வளர்ப்பது பேஷனாகி வருகிறது.
இதற்காக, தனியார் நர்சரிகள் மூலம் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.
இவ்வாறு விற்பனை செய்ய சட்டப்படி, உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டுமாம். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.
புதிதாக உரிமம் பெற விரும்புவார்கள் அந்தஅந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, படிவம் அ, 1,000 ரூபாய்க்குச் சலான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இடத்திற்கான சொத்துவரி ரசீது, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை கொடுத்து விண்ணப்பித்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.