இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் பிரமிடு, உலகிலேயே மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலத்தடி மலைப்பகுதியில் மறைந்திருக்கும் இராட்சத பிரமிடு, எகிப்தின் கிசா (Giza) பிரமிடுகள் அல்லது இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) ஆகியவற்றை விட மிகவும் பழமையானது என்றும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையானது என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள இந்த மெகாலிதிக் (megalithic) தளம் Gunung Padang என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் மலைப்பகுதி, பழங்கால கல் கட்டமைப்புகளால் நிரம்பியுள்ளது. உள்ளூர் மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது, அதை அவர்கள் ‘பண்டன் பெருந்தக்’ (punden berundak) என்று அழைக்கிறார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குனுங் படாங் உலகின் மிகப் பழமையான பிரமிடு அமைப்பாகும். மேலும், நாகரிகங்கள் தோன்றுவதற்கும், மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் முன்பு அழிந்துபோன எரிமலையின் மேல் கட்டப்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தரவுகளின்படி, இதன் உட்புறத்தில் பல அறியப்படாத தகவல்கள் மறைந்து இருக்கிறது.
இது 27 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருககலாம் என்று கூறப்படுகிறது. 2011 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், புவியியலாளர் டேனி ஹில்மன் நடவிட்ஜாஜா (Danny Hilman Natawidjaja) தலைமையிலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புவி இயற்பியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் கொண்ட குழு, இந்தோனேசியாவின் தேசிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய, தரையில் ஊடுருவக்கூடிய ரேடார்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.