பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் விதமாக பர்கர் உள்ளிட்ட மேற்கத்திய உணவு வகைகளை புறக்கணிக்க மலேசியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஷா மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனைத்தொடர்ந்து தரைவழித்தாக்குதலிலும் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனதிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மேற்கத்திய நிறுவனங்களை மலேசியர்கள் புறக்கணித்து வருகின்றனர். கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கோபத்தை மேலும் தூண்டியுள்ளது,
மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் மற்றும் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்டவற்றை மலேசியர்கள் புறக்கணிக்க வலியுறுத்தும் செய்திகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
மலேசியாவின் சில பிரபலங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம், அமெரிக்க நிறுவனம் தனது பணியாளர்கள் ஹமாஸுக்கு எதிரான போரில் போராடும் IDF வீரர்களுக்கு இலவச உணவை வழங்கிய புகைப்படத்தை வெளியிட்டது. இதற்கு மலேசியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.