ராஜஸ்தானில் அசோக் கெலட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
200 பேர் கொண்ட சட்ட சபையில் 101 இடங்கள் பெற்றால் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடும். இந்த நிலையில், 110 முதல் 118 இடங்களைப் பெற்று பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 67 முதல் 75 இடங்களுக்குள் சுருங்கிவிடும் என்றும், மனோரமா செய்தி நிறுவனம் – விஎம்ஆர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2018 -ம் ஆண்டு 39.4 சதவீதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் தற்போது 37.4 சதவீதமாகக் குறையும் என்றும், 38.8 சதவீதத்திலிருந்து பாஜகவின் வாக்கு வங்கி 43.6 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி, சுயேச்சை உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் வாக்குகளைப் பிரிக்கும் சூழ்நிலை உள்ளது என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொண்டர்களும், பொது மக்களும் உற்சாகத்தில் உள்ளனர்.