சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பிரசத்தி பெற்ற பாம்லேஸ்வரி கோவிலில் தரிசனம் செய்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் டோங்கர்கர் என்ற இடத்தில் பாம்லேஸ்வரி கோவில் உள்ளது. இது 1600 அடி உயர மலை உச்சியில் உள்ளது. இந்த ஆலயம் பாடி பம்பலேஸ்வரி என்று அழைக்கப்படுகிறது. தரை மட்டத்தில் உள்ள மற்றொரு கோவிலான சோட்டி பாம்பளேஸ்வரி பிரதான கோவில் வளாகத்திலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு தசரா மற்றும் நவராத்திரியின் போது ஜோதி கலசம் ஏற்றுவது முக்கிய விழாவாக கருதப்படுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற பிரதமர் மோடி பாம்லேஸ்வரி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.