கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கிறிஸ்தவ கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் கடந்த மாதம் 29ஆம் தேதி குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலப்புரத்தில் அதிகமாக 26 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் பத்து வழக்குகளும், எர்ணாகுளம் புறநகர் மற்றும் திருவனந்தபுரம் நகரத்தில் ஐந்து வழக்குகளும், திருச்சூர் நகரம் மற்றும் கோட்டயத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.