இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் இயக்க ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு கூறியதை தொடர்ந்து இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டன. இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகளை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது. இதனையடுத்து இந்தியா-கனடா உறவில் விரிசல் அதிகமானது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை சில தவறான கருத்துகளால் இடைநிறுத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
“சில கனடிய அரசியல்வாதிகளிடையே சில தவறான கருத்துகள் உள்ளன, அவை அடிப்படையற்றவை. இந்தியாவின் சந்தை பெரியது மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்குவதால் இந்த நடவடிக்கை கனடாவை மேலும் பாதிக்கும் என்று கோயல் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2022-23 இல் 8.16 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் சந்தை பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு உரத்தை கனடா அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.