இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!
Oct 27, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் விஞ்ஞானிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி: விமானப்படைத் தளபதி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளம் விமானிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் போர் விமான பயிற்சிப் பள்ளியின் 75-வது பிளாட்டினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. விழாவில், இப்பள்ளியில் பயின்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், மூத்த விமானிகள், முன்னாள் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச அளவில் விமானிகள், விமான பயிற்றுனர்களுக்கான பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகளும் நடந்தன. விமானப்படை சாகச நிகழ்ச்சியில், பல்வேறு ரக விமானங்கள் தாழ்வாக பறந்தும், வானத்தில் பல்டி அடித்தும் சாகசம் செய்தன.

குறிப்பாக, விமானப் படையின் ‘ஆகாச கங்கா’ குழுவைச் சேர்ந்த 9 வீரர்கள் ஹெலிகாப்டரில் 9,000 அடி உயரத்தில் இருந்து ‘ப்ரீ டைவிங்’ செய்து, ‘பாராசூட்’ உதவியுடன் தரை இறங்கி இலக்கை வந்தடைந்தனர். மேலும், 3 வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேசியக்கொடி போன்று ‘ஸ்கை டைவிங்’ செய்தனர். அதேபோல, 2 வீரர்கள் விமானப் படையின் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக கைகளை இணைத்து குதித்தனர்.

இவ்விழாவில், விமானப்படைத் தளபதி வி.ஆா்.சௌத்ரி, பயிற்றுநா் பள்ளியின் பாரம்பரிய மண்டபத்தைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடர்ந்து, தளபதி வீ.ஆர்.சவுத்ரி பேசுகையில், “விமானப் படையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நான் விமானப் பயிற்சி பெற்ற காலத்தில், தொழில்நுட்பங்கள் பழமையாக இருந்தது.

அதைப் போல் இல்லாமல், தற்போது 20 வயதுக்குள் விமானப் படையில் சேரும் வீரர்கள், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியில் விமானம் ஓட்டுவது எப்படி, தரையிறக்குவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தாங்களாவே கற்றுக் கொள்கின்றனர். வரும் காலத்தில், விமானிகளுக்குத் தேவையான சிறப்பான பயிற்சிகளை வழங்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்.

விழாவில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை கௌரவிக்கும் வகையில், மறைந்த போா் விமானி என்.ஜெ.எஸ்.செகூனின் உருவச்சிலை அமைந்த ‘ஸ்மிருதி ஸ்தலம்’ என்று அழைக்கப்படும் போா் நினைவிடத்தை, 1999-ம் ஆண்டில் ‘சபேத் சாகா்’ விமானத் தாக்குதலின்போது மறைந்த ஸ்குவாட்ரன் தலைவரும், பயிற்றுநா் பள்ளியின் முன்னாள் மாணவருமான அஜய் அஹுஜாவின் மனைவி அல்கா அஹுஜா திறந்து வைத்தாா்.

Tags: IAF Fighter Training School75th Platinum Jubilee Celebration
Share
Tweet
SendShare
Previous Post

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தம்!

Next Post

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies