ஜம்முவின் நக்ரோட்டாவில் டிபன் பாக்ஸ் வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவிரவாதிகள் தேசிய நெடுஞ்சாலையை குறிவைக்கும் முயற்சியை ஜம்மு காஷ்மீர் போலீசார் தடுத்துதுள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில், சித்ரா நர்வால் நெடுஞ்சாலையில், சோதனை சாவடிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு சுமார் இரண்டு கிலோகிராம் எடையுள்ள டிபன் பாக்ஸ் அடிப்படையிலான ஐஇடி கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி செயலிக்க செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு பள்ளத்தாக்கில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என டிஜிபி ஆர்ஆர் ஸ்வைன் குறிப்பிட்டுள்ளார்.