இண்டேன் கேஸ் முன்பதிவு செய்யும் அலைபேசி IVRS சிஸ்டத்தில் தமிழ் மொழியைத் தேர்வு செய்யும் வசதியில் இந்தி மொழி மட்டுமே உள்ளதாகவும், தமிழ் மொழியில் சேவை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் நவம்பர் 1 -ம் தேதி முதல் ஏர்டெல்லிலிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள், இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் பதில் சிஸ்டத்தில், அதாவது 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
விருப்ப மொழி பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே பெற முடிந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது உண்மையே. இந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுவிட்டது.
இனி வரும் காலத்தில் எங்களது IVRS சிஸ்டம் மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியைத் தடையின்றி பெற முடியும்.
இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் மக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.