சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டி வில்லியர்ஸ் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றனர்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார்.
இவர் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார். முதல் ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் இங்கிடி வீசினார்.
அந்த ஓவரிலிருந்தே பௌண்டரீஸ் அடிக்க ஆரம்பித்த ரோஹித் சர்மா மொத்தமாக 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 3வது முறையாக ரோகித் சர்மா அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் 2 சிக்சர்களை விளாசியதன் மூலம் முக்கியமான சாதனை ஒன்றையும் ரோகித் ரோஹித் படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சிக்சர்களுடன் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் 56 சிக்சர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இரண்டாவதுப் இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் விளாசியதன் மூலமாக கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்ததோடு, 58 சிக்சர்கள் விளாசி டி வில்லியர்ஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் குறைந்தபட்சம் இன்னும் 2 போட்டிகள் இருப்பதால், டி வில்லியர்ஸ் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.