ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!
Apr 29, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 5-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக வெளியிட்டு விட்டது. அதேசமயம், பா.ஜ.க. பல்வேறு கட்டங்களாக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க. தரப்பில் இதுவரை 4 முறை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 5-வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இப்பட்டியலின்படி, அன்ஷுமான் சிங் பாடி கோலாயத்திலும், கோபால் சர்மா சிவில் லைன்ஸிலும், பிரஹலாத் குஞ்சல் கோட்டா வடக்கிலும் களமிறங்குகிறார்கள். ராஜகேராவில் நீரஜா அசோக் ஷர்மா, மசூதாவில் அபிஷேக் சிங், ஷெர்கார்வில் பாபு சிங் ரத்தோர், மவ்லியில் கே.ஜி.பாலிவால், பிபால்டாவில் பிரேம்சந்த் கோச்சார், பாரண் அட்ருவில் ராதிஷ்யம் பைர்வா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஹனுமங்கரில் அமித் சவுத்ரி, சர்தர்ஷாஹரில் ராஜ்குமார் ரின்வா, ஷாபுராவில் உபென் யாதவ், கிஷன் போலில் சந்திரமோகன் பட்வாடா, ஆதர்ஷ் நகரில் ரவி நய்யார் மற்றும் பரத்பூரில் விஜய் பன்சால் ஆகியோரையும் வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. 2-வது வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpRajashan5th list
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் ஒரு சாதனை படைத்த ரோஹித் சர்மா !

Next Post

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies