மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து பூபேஷ் பகேலுக்கு ரூ.508 கோடி கைமாறி உள்ளதாகப் புகார் எழுந்தது.
ராய்பூரில் ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் கைதான இடைத்தரகர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மகாதேவ் புத்தகம் செயலி உள்பட 22 சட்ட விரோத செயலிகள் மற்றும் வலைத்தளங்களுக்குத் தடை விதித்து, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்கம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ‘மகாதேவ் செயலி தொடர்பான வழக்கை ஒன்றரை ஆண்டுகளாக சத்தீஸ்கர் அரசு விசாரித்து வரும் வருகிறது. அதற்குத் தடை கேட்டு சத்தீஸ்கர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அமலாக்கத்துறை கோரிக்கை அனுப்பியது. அதன் பேரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வர் பூபேஷ் பகேல் மீதான லஞ்ச குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.