இன்றையப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றையப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறயுள்ளது.
இலங்கை அணி இந்தத் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்று 5 போட்டிகளில் தோல்வியுடன் 4 புள்ளிகளில் 7 வது இடத்தில் உள்ளது.
அதேபோல் வங்கதேச அணி விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் முதல் 8 இடத்தில உள்ள அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு என்று ஐசிசி அறிவித்திருந்த நிலையில் இரு அணிகளுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெற கடுமையாக போராடும் என்பது சந்தேகம் இல்லை.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பதாக இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு இலங்கையின் தொடர் தோல்விகளே காரணம் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த சிலதினங்களாக வழக்கத்துக்கு அதிகமாக காற்று மாசுபாடு அதிகரித்து நகர் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது.காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு (ஏகியூஐ) 346 ஆகஉள்ளதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பலர் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக, உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் நேற்று இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கவில்லை.இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று உலக கோப்பை போட்டி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டிக்கு முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.