பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க பாஜக பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செந்தில்பாலாஜி, ஜெகத்ரட்சகன், பொன்முடி, எ.வா.வேலு, துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், அனிதாராதாகிருஷ்னன், தயாநிதிமாரன், கலாநிதிமாரன், கனிமொழி, ஆ.ராஜா, மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், இவர்களும் இவர்களைப்போல இன்னும் 20 பேர்களும், எப்படி பனக்காரர்களாக மாறினர்? எப்படி கார்ப்பரேட்களாக மாறினர்! அதற்கான முதல் முதலீடு இவர்களுக்கு எப்படி வந்தது?
இவர்களெல்லாம் தொழில்கல்வி கற்று அதன் அடிப்படையில் மோடி ஆட்சியில் ஸ்டார்டப் இந்தியா லோன் வாங்கி தொழில் செய்து தொழில் அதிபர் ஆனவர்களா என்ன? அல்லது இவர்களெல்லாம் பரம்பரை ஜமீன்களா?
மாணவன் உதயநிதியின் ரெட்ஜெயின் மூவிக்கு முதல் படம் எடுக்க 300 கோடியை யார் கொடுத்தது? அப்பாவாவின் ஊழல் பணமா? தாத்தாவின் ஊழல் பணமா? அல்லது பினாமிகளின் ஊழல் பணமா? பினாமி என்றால் எந்த பினாமி?
கருணாநிதி குடும்ப பினாமிகளின் பெரும்பாலானவர்கள், ஒன்பதாம் நிலை, பத்தாம் நிலை படித்தவர்கள்! ஏழைகள்! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்துறையில் தினக்கூலியாக, டீசல் மோட்டார் மெக்கானிக்காக மாதம் 600 ரூபாய் 800 ரூபாய் சம்பாதித்தவர்கள்! அல்லது எந்த வேலையும் இல்லாமல் சுற்றித்திரிந்தவர்கள்!
எம்.ஜி.ஆர் ரசிகன் என்னும் தகுதியில் எம்.எல்.ஏ, அல்லது கிச்சன் எடுபிடி என்பதால் எம்.எல்.ஏ என ஆனவுடன் ஊழல் செய்து பங்கு கொடுத்து பங்கு வாங்கி அந்த பங்கிலேயே முதலீடு செய்து கல்வி தந்தையாகி விட்டார்கள்! தொழில் அதிபராகி விட்டார்கள்!
* ஈவேராவிடமிருந்து கட்சியை பிடுங்கினார் அண்ணாத்துரை!
அண்ணாத்துரையிடமிருந்த கட்சியை அவரின் மரணத்தை தொடர்ந்து கபளிகரம் செய்தார் கருணாநிதி!
கருணாநிதி என்னும் கபடதாரியின் பல மனைவியரின் பிள்ளைகளின், மருமகன்களின், மருமகள்களின், அக்காள் மகனின், அக்காள் பேரனின், அக்காள் பேரன் மனைவிகளின்-
மொத்தத்தில் கருனாநிதியின் அடுப்படி மந்திரி சபையில் எடுபிடியாக செயல்பட்டு, அரசின் வரிப்பணமும், மத்திய அரசின் திட்டப்பணமும் மக்கள்நல திட்டங்களுக்காக ஒதுக்கப்படும்போது, அதில் பாதியை அல்லது முக்கால் பங்கினை அல்லது முழுவதையுமே திருடி கிச்சன் கேபினட்டில் கொடுத்து தனக்கும் பங்கு வாங்கி-போலீஸ் ஸ்டேசன், பத்திரபதிவு அலுவலகம், டிராபிக் போலீஸ், ஆர்.டி.ஓ அலுவலகம், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றுப்புற சூழல் அலுவலகம், கம்பெனிகளுக்கு உரிமை வழங்கல், புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், கோயில் சிலைகள்- இப்படி எங்கெல்லாம் எவ்வளவு அதிகமாக கமிஷன், கட்டிங் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி கருநாநிதியின் அடுப்படி மந்திரி சபையில் யாரிடமாவது தந்து அதிலும் கமிஷன் வாங்கி-ஆற்றுமணல், கிராணட், மலைகள் இப்படி எதையெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ கொள்ளையடித்து கிச்சன் கேபினட்டிடம் கொடுத்து கமிஷன் வாங்கி-கிச்சன் கேபினட் நபர்களிடம் அவர்களின் பங்குத்தொகையை கோடிக்கணக்கில் வாங்கி அதை வட்டிக்கு விட்டு சம்பாதித்து வட்டித்தொகையில் ஒரு பங்கினை தானும் எடுத்து எஞ்சியதை அவர்களிடம் கொடுத்து, இப்படி கொள்ளையடித்ததில் பெற்றுக்கொண்ட லஞ்சத்தில் முதலீடு செய்து- அதிபர்கள் ஆகி, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என பதவியில் இருப்பதால் எல்லோரையும் மிரட்டி விரட்டி அராஜகம் செய்து யாரும் நியாயத்தை பேசாதபடி செய்து-மக்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பிச்சை போட்டு மீண்டும் ஓட்டு வாங்கி மக்கள் சிந்திக்காமலிருக்கவும் சிந்திக்காமல் ஓட்டுப்போடவும் அதே வேளையில் சமுதாயத்தை நாச வழியில் வழிநடத்தவும், கிச்சன் கேபினட்டும் தாங்களும் சம்பாதிக்கும் வகையிலும் மது ஆலைகளை நடத்துவது, மது ஆலைகள் அதிக லாபம் கண்டிட சாராய கடைகளை அதிகரித்து, சாராயத்தை மாணவர்களுக்கும் கொடுத்து- சமுதாயத்தை கெடுத்து அதன் மூலம் இன்னும் அதிகமாக சம்பாதித்து, புதிதாக சாராயத்தோடு கஞ்சாவிலும் சம்பாதித்து கிச்சன் கேபினட்டுக்கு கொடுத்து பங்கு வாங்கிமக்களிடம் கொள்ளையடித்த பணத்தை சினிமாவில் போட்டு வங்கி கணக்கில் முறையாக வரவு வைத்து தொலைக்காட்சிகளை ஊடக நிறுவனங்களை பத்திரிகைகளை ஊழல் பணத்தில் நடத்தி, மற்ற நேர்மையான ஊடகங்களை விலைகொடுத்து தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் மூலதனத்தில் பள்ளிக்கூடம், பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் என அமைத்து சம்பாதிப்பதாக கணக்கு காட்டி, வெளிநாடுகளில் பதுக்கி, மொத்தத்தில் கருனாநிதியின் பரந்த குடும்பத்திற்கு தமிழகத்தில் இப்போது ஜெகத்ரட்சகனைப்போல, பொன்முடியைப்போல, ஏ.வா.வேலுவைப்போல 30 பினாமிகள் இருக்கிறார்கள்!
இந்த பினாமிகளுக்கு 3000 பினாமிகள் இருக்கிறார்கள்!
மிகப்பெரியதொரு மாபியா கும்பல் இப்போது தமிழகத்தை சூழ்ந்துள்ளது!
இந்த அளவுக்கு இந்தியாவில் இதர மாநிலங்களில் இல்லை!
* பாரதிய ஜனதாவை பொறுத்தமட்டில் நேர்மையே அதன் தாரகமந்திரம்! மக்கள் வரி பணத்தில் ஒரு பைசாக்கூட பாஜகவினரால் எடுக்கப்படவில்லை! வரிப்பணம் அப்படியே ஏழைகளை உயர்த்த செலவிடப்படுகிறது! நாடு முன்னேற செலவிடப்படுகிறது!
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்தது, அணுக்குண்டு சோதனை செய்தது.
கார்க்கிலில் ஊடுருவலை தடுத்து போர் நடத்தி வெற்றி பெற்றது. தங்க நாற்கர சாலை போட்டது. நரேந்திரமோடி அவர்களின் ஆட்சிக்காலத்தில், எல்லைக்கு அந்த புறத்திலிருந்து இந்தியாவுக்குள் வந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர்களின் நாடுகளான பர்மா, பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
500,1000 நோட்டுகளை வங்கியில் மாற்றவேண்டும் என சொல்லி கள்ளப்பணத்தையும் கறுப்பு பணத்தையும் ஒழித்தது. பல்வேறு வரிகளாகவும் லஞ்சமாகவும் இருந்த வரி வசூலை ஒரே வரியாக எளிமையான வரியாக லஞ்சமில்லா வரியாக ஜி.எஸ்.டி வரியாக குறைத்தது.
370ஆவது சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற்று, காஷ்மீருக்கு பூரண சுதந்திரத்தை பெற்றுத்தந்தது.
முத்தலாக்கை நீக்கியது, அயோத்தியில் ஆலயம் கட்டுவது, பொருளாதார வளர்ச்சியில் உலகின் 11 வது இடத்தில் இருந்து இந்தியாவை 5 ம் இடத்திற்கு முன்னேற்றியது.
இம்மாதிரியான செயற்கரிய செயல்களின் நீட்சியாக நாட்டில் ஊழலை ஒழிப்பது என்னும் புனித பணியையும் பாரதீய ஜனதா அரசு செய்து வருகிறது! யாரெல்லாம் மக்கள் பணத்தை திருடி அதையே மூலதனமாக கொண்டு தொழில் துவங்கி, கார்பரேட்டுகளாக மாறி, மென்மேலும் மக்கள் பணத்தை திருடுகிறார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களின் குற்ற சம்பாத்தியத்தை அரசுடமை ஆக்குவது, அவர்களுக்கு சிறைத்தண்டனையை நீதிமன்றத்தில் வாங்கித்தருவது என்னும் பணியை வருமானவரித்துறை அமலாக்கத்துறை ஆகிய துறைகளின் மூலம் பாரதீய ஜனதா அரசு செய்து வருகிறது!
* நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை தவிர்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகள் திமுகவைப்போல பணம் சம்பாதிப்பதற்காகவே அரசியல் செய்கிறார்கள்!
எனவே அனைத்து அரசியல் கட்சிகளுமே பாரதிய ஜனதா கட்சியின் இந்த புனித செயல்பாட்டை, நாட்டை, சுத்தப்படுத்தும் செயல்பாட்டை, ஏழைகளை மீட்டெடுக்கும் செயல்பாட்டை மனதளவில் எதிர்க்கின்றன!
வெளிப்படையாக சோதனைகளை ஆதரித்தாலும் உள்ளூர எதிர்க்கிறார்கள்! காரணம் இவர்கள் அனைவருமே இப்படி செய்து சம்பாதிக்கத்தான் அரசியலுக்கே வந்துள்ளனர்!
அப்படி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், ” இதை அரசியலுக்காக செய்கிறார்கள்” என குறையாக கூறுகிறார்கள்!
நாட்டை சுத்தப்படுத்தும் அரசியல், ஊழலை ஒழிக்கும் அரசியல் நல்லதுதானே!
தேர்தல் வந்துவிட்ட நேரத்தில் செய்வதால் இது தவறு, இதை முன்பே செய்திருக்கலாமே என்கிறார்கள்!
மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்த தொகையின் ஒரு பகுதியை மக்களுக்கு ஓட்டுக்கு பணமாக கொடுத்து மீண்டும் பதவிக்கு வந்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதுதானே இந்த கொள்ளையரின் வேலையாக உள்ளது.
எனவேதான் தேர்தலுக்காக குற்றப்பணத்தை வெளியே எடுக்கும் நேரத்தில் பிடிக்கப்படுகிறது! தேர்தல் ஆணையமும் இதைத்தானே செய்கிறது! பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி! மக்களில் சிலரும், தவறான வழியில் பணம் கிடைத்தாலும் சம்பாதித்து கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள்!
எனினும் நேர்மையான மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் நேர்மையான மக்களையும் கிடைத்தால் சம்பாதிக்கலாம் என்று தவறாக முடிவெடுக்கும் மக்களையும் அனைவரையும் காப்பாற்றும் நோக்கத்தில் பாரதீய ஜனதா கட்சி இந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது!
இந்த ஊழல் வாதிகளின் சொத்துக்களையும் பணத்தையும் பறிமுதல் செய்தால் அந்த பணம் ஏழைகளின் நலனுக்காக செலவு செய்யப்படும்! இந்த ஊழல் வாதிகள் ஒழிந்தால்தான் நமது தலைமுறை இந்த நாட்டில் நல்ல வன்னம் வாழமுடியும்!
எனவே பாரதீய ஜனதா கட்சியின் இந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்! பாரதீய ஜனதாகட்சி இப்போது மேற்கொண்டுள்ள இந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கௌரவர்களுக்கு எதிரான பாண்டவர்களின் மகாபாரத போருக்கு இணையானதாகும்! திமுகவும், இந்த நடவடிக்கையை குறை சொல்வோரும், இந்த புனித செயலுக்கு பாராட்டு தெரிவிக்காதவர்களும் கௌரவப்படையினர்!
பாரதிய ஜனதா கட்சியும் இந்த ஊழல் ஒழிப்பு சோதனை கைது நடவடிக்கைகளை ஆதரிப்போரும் பாண்டவர் படை! பாண்டவர் படைக்கு தலைமையேற்கும் கண்ணந்தான் பிரதமர் நரேந்திரமோடி!
தமிழகத்தில் அர்ஜுனந்தான் மக்கள்தலைவர் அன்ணாமலை! பாண்டவர்படை வென்றதுபோல் பாஜகவும் தமிழகத்தில் வெல்லும்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.