வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது தான் இண்டியா கூட்டணியின் சமூக நீதி இது தானா? என திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, ‘நாகா’ இன மக்கள் குறித்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது’ என ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர். என். ரவி கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நாகலாந்து மக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக கவர்னரை என்னையும் தரம் தாழ்ந்து ஆர்.எஸ்.பாரதி பேசி வருகிறார்.
The recent attack on Raj Bhavan is an outcome of such uncouth speeches against the Hon Governor by DMK leaders, yet DMK doesn't seem to have learnt the lesson.
Reducing the pride of our North Eastern brothers & sisters to Dog eaters is highly condemnable.
While Thiru… pic.twitter.com/mJOI7fY8fm
— K.Annamalai (@annamalai_k) November 6, 2023
சமீபத்தில் ராஜ்பவன் மீதான தாக்குதல், ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான். ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இண்டி கூட்டணியின் சமூக நீதியா? எனத் தெரிவித்துள்ளார்.